
தொலை பேசுமுன்
மனம் பதறும்
அம்மா அப்பா
சுற்றெமெல்லாம்
சுகமாயிருந்து
hello
சொல்லவேண்டுமென்று...
போனமுறை
பேச முடியாதவைகளையும்
பேசமுடியாதவர்கள் கூடவும்
பேசியே தீரவேண்டும் இம்முறை
என்றெண்ணி
பேசும் ஒவ்வொரு முறையும்
‘ம்’ மட்டுமே
ஒலித்து முடியும் என்
ஒலியழைப்புகள்...
போனமுறை பேசியபோது
பாக்கியக் கிழவி
செத்துப் போனதை
அப்பா சொல்லாமலே விட்டிருக்கலாம்
கூன் முதுகும்
பனம்பழ வாசமுமாய்
வந்துபோகிறது
அவளின்
நினைவுகள்
நீலமும் மஞ்சளுமாய்
பூக்கூட்டம் - நீள்
பச்சைப் புல்வெளி
கொஞ்சிக் குலாவும் பறவைகள்
இன்னம் சில
பெயரறியா மிருகங்களுமுண்டு இங்கே
ஆயினும்
மனம் பொறுக்கும் இங்கில்லா
மரமல்லியையும்
வேப்பம்பூக்களையும்....
- ரிஷி சேது (rishi_