என்னைவிட முப்பது வயது மூத்தவனான நீ
எனக்கு  ஏழாம் வகுப்பு நடத்துவதற்கே
அறுகதையற்றதில் அற்புதமாக திகழ்ந்தாய்
"பட்டையும் கொட்டையும்
ஒழுக்கம் தரும்"
நீ நடத்திய பாடம்தான்
கணித வகுப்பில் தொடர்பற்ற
பட்டையும் கொட்டையும் கேட்டே
புளித்த செவிகள்
பாட வெளிக்குள் அது புகுந்து கொண்டதனால்
வகுப்பைவிட்டு  வெளியே கிடந்தது கணிதம்
ஒரு பழைய துடைப்பம் போல

பழைய நினைவுகளுக்காக எப்பொழுதாவது ஒருமுறை
அந்த பள்ளியின் வாசலில்
நிற்கும் கால்கள்  பூத்துப்போன கண்கள்
பழமையின் எச்சங்களோடு
இன்னும் கழட்டி எரியாத
கொட்டை வாத்தியார் நொடிந்துப்போய் கிடப்பார்

-ஜெயபிரகாஷ்( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It