கீற்றில் தேட...


smellநுகர நேரும்போதெல்லாம்
எனது சுவாசத்தை
நிலை குலையச் செய்து விடுகின்றன,
விதம் விதமான நறுமணங்கள்.

ஏற்க இயலாத நாற்றமொன்றின்
சமாதியாகத்தான் உணர்கிறேன்
என்னை கடந்து போகும்
சில சட்டைகளில் இருந்து
வீசும் நறுமணத்தை.

உடம்பிலிருந்து
ஊற்றெடுக்கும் நாற்றமே
மேலானதாக இருக்குமென
நினைக்க வைக்கிறது
சில உடைகளின் மீது
ஊற்றிக் கொண்டு வரப்பட்ட
வாசம்.

ஒப்பனையின்
கடைசி வேலையாக
வலுக்கட்டாயமாகப் பீய்ச்சியடித்து
நிறைவேற்றி வைக்கிறார்கள்,
நறுமணத்திற்கும்
துர்நாற்றத்திற்குமான
வாழ்கை ஒப்பந்தத்தை.

தமது
எண்ணங்களின் மீது
நறுமணம் பீய்ச்சுவதாகவே
எண்ணத் தோன்றுகிறது,
எனக்குத் தெரிந்த சிலர்
செண்ட் அடித்துக் கொள்ளூம்போது.

ஜெயபாஸ்கரன் (jayabaskaran_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)