
கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது
பக்கத்து வீட்டு பாலுவின் அம்மா
அவனுக்கு ஊட்டி விடுவதின் சுகத்தை
வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில்
டாலர்களை நாற்ப்பத்தைந்தால் பெருக்கிக்கொண்டே
கொஞ்சமாய் பேசும் அப்பாவிடம்
தெரிந்து கொள்ள வேண்டும்
அடுத்த வீடு அனந்துவின் அப்பா
கொஞ்சிக் கொஞ்சி சொன்ன
கொஞ்சம் கதைகளை
கணினிகளுக்குள் விளையாடிப் பழக வேண்டும்
முகேஷ் மற்றும் அவனது தம்பிக்கிடையேயான
தலையணை சண்டைகளை
தற்கொலை செய்வதை
சொல்லிவிட்டு சாகக் கூட
ஆளிலா தனிமையில்
எப்படி மனிதத்தைக் கற்றுக் கொடுக்கும்
கிரெடிட் கார்டுகளும் ஏ.டி.எம் கார்டுகளும்?
- லதாமகன் (