
புத்தனின் பல்
இருப்பதாக
சொன்னார்கள்.
எந்த ஊரில்
எந்த இடத்தில்
அந்த பல்
விழுந்ததென்று
தெரியவில்லை.
தினந்தோறும்
ஆயிரக்கணக்கான
பற்கள்
உதிர்ந்துக்கொண்டேதான்
இருக்கின்றன.
நீளமான பற்கள்
தட்டையான பற்கள்
முனைமழுங்கிய பற்கள்
வளைந்த பற்கள்
எத்து பற்கள்
பால் பற்கள்
இவற்றின் இடையே
சரியாக அடையாளம்
சொன்னார்கள்.
சற்று நீண்டக் கூரான
ரத்தம் வடியும் பற்களை.
ஒரு நாளிதழ் செய்தி
-------------------------
இரண்டாவது பக்கத்தில்
இனப்பெருக்க காலம்
மீன்களை வேட்டையாடாதீர்.
அரசாங்க அறிவிப்பு.
முதல் பக்கத்தில்
தேர்தல் காலம்
தலைவர்கள் ஆவேசம்.
இலங்கையில் போர்நிறுத்தம்.
- என்.விநாயக முருகன் (