
ஆடை அணிந்த இந்த மனிதனை
பிடிக்கவில்லை என் சிறுமிக்கு
காரணங்கள் சொல்ல தெரியாத இவள் மௌனத்தின் மொழியை
மொழிபெயர்க்க கூடவில்லை...!
மிருதுவான தன் கைகளால்
என் கழுத்தை பற்றிக்கொள்ளும்
அழுத்தத்தில் தெரிகிறது
இதுவரை உணர்ந்திராத ஒரு மிரட்சி
கேட்டு சலித்து மறந்த பிறகு
ஒரு விடுமுறை நாளின் மதிய உறக்கத்தில்
எழுப்பிச் சொன்னாள் "அந்த டிரைவர் அங்கிள்
உச்சா போறப்போ Disturbing me டாடி ...ஸ்கூல் போகும்போது "
சில்வண்டுகளின் சிநேகிதம்....!

இல்லாத பிரார்த்தனைகள்
போல வெறும் மௌனமாய் கழியும் இரவு .....
பிரசவம் முடிந்த புணர்ச்சி
பிள்ளைக்கு பயந்து சைகைகளில்
துவங்கி ரகசியங்களின் குரலில்
நிகழ்வதை போல் தன்னோடு பேசி கொள்ளும்
மனசு ....
அலாரம் வைக்க மறந்து போனது கனவில் வர
விழித்தெழுந்து பார்த்தால் விடிந்திருப்பதை உணரும்
புன்னகை போல தனக்கு தானே கேலியாய் தோன்றும்
நிமிஷங்கள்
வாழ்க்கை சுவாரசியமாய் போய்
கொண்டிருக்கிறது தோழி .....
மற்றபடி நலம் "சந்தோசமா இருக்கேன்மா "
என்று செல்போனில் பதில்தரும்
மகளைப்போல....
- நேசமித்ரன்