
அவனுக்கும் எனக்கும் ஒரு விவாதம் தொடங்கியது
கடவுள் பற்றியும் மழை பற்றியும்
கடும் சொற்களை வீசுகிறான்
சொற்கள்கொண்டே தடுக்கிறேன்
எதிர்க்க முடியாத சொற்கள் நேராக என்மீது
மழையை என் கண்களில் வடித்துக்காட்டியும்
கடவுளின் செயல்களை உச்சரித்தும்
விவாதம் திசை திரும்பவில்லை
நச நசக்கும் மழையும்
பெருங்கொண்ட மழையும்
அவனது அவநம்பிக்கையானது
கடவுளை மழைக்குள் எறிகிறான்
கடவுள் நனைந்துகொண்டு
எனக்கு சாதகமாகவே பேசத் துவங்கினார்
மழையும் மழை கலந்த வாழ்க்கையுமென
அவன் ஒரு வன்முறையாளனைப் போல
எதிர்கொள்ளமுடியாத கோபம்கொள்கிறான்
மழைவெள்ளத்தின் இழப்பு பற்றியும்
அழத் தெரியாத கடவுள் பற்றியும்.
தொடர்பு
- அறிவுநிதி