போஜனமின்றி

பிணந்தின்னிகளுக்கு
நெடுநாள் கழித்து
வலிமையிழந்து இறந்துபோன
ஒரு முடவனின் சடலம்
மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
சதா காலமும் படபடக்கும்
அதன் சிறகின்
ஒவ்வொரு இறகிலும்
வீசிக்கொண்டிருக்கிறது
பிணவாடை
அதன் அலகில்
படிந்திருக்கும் உதிரத்தின்
ஓராயிரம் கறைகளுக்கு
நூறாயிரம் பிணக்கதைகள்
ஒளிந்து கிடக்கிறது.
அழுகிய சதைப்பிணங்களை
கொத்தித்தின்று
வயிற்றின் சுருக்கங்களை
சரிசெய்துக்கொள்ளவும்,
எலும்புகள் மற்றும் நரம்புகளை
கொண்டு கூடுகள் அமைக்கவும்,
வானுயுற பறந்து வாழவும்
அவைகள் மரபு மாறாதவை.
ஒரு உயிரற்ற பிணத்தை
தின்று கொழுப்பதன் மூலம்
என்ன வீரமிருக்கு,
வறுமைதான் இருக்கு.
- இரஞ்சித் பிரேதன் (