
முரட்டுத்தனமாய் தாக்குங்கள்;
பூனே நகரத்துள்
கன்னடப் படம் ஓடும்
கொட்டகை கொளுத்தப்படட்டும்;
பெங்களூரில் வாழும்
தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!
பலியிடுங்கள் அவர்களை.
பள்ளிகள் மட்டும் பிள்ளைகள்
பாடிக்கொண்டிருக்கட்டும்
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'
- பிரேம்குமார் சண்முகமணி