பூக்கள் மலருமெனத்
தானே... நட்டார்கள்...
அப்பூக்கள்
மலரும் முன்னே ....
அலட்சியங்களின்
அனல் எழுந்து
கருகச் செய்துவிட்டதே ...
சிறு மலர்களின்
கருகிய நினைவுகள்
ததும்பும்
கும்பகோணம்....
சுமித்ரா சீறி
வெகு தூரக்
கடற்கரைகள்
மக்களை வேண்டாமென்றே
கைகழுகி விட்டது ..
இங்கே அனலுக்குப்
பதிலாக அலை ...
கருகுதலுக்குப்
பதிலாக
சிதைவு.....!!
இரண்டிற்கும்
ஒற்றுமை ஒன்றுதான்
அனல் பறக்கும்
கண்ணீர் அலைகள் ...!
-கலாசுரன். (