
அகாலத்தில் தொலைபேசியை
கன்னத்தில் தவழவிட்டு
உன் குரலினை ஏந்துகையில்
அழகிய சோலைகளில் பசும் மலைவனங்களில்
செம்மாலைக் கடற்கரைகளில்
யன்னலுக்கு வெளியேயான நள்ளிரவு மழையில்
மொட்டைமாடி நிலவில்
உன் கைகோர்த்து நடப்பதாகச்
சொப்பனங்களில் வாழ்ந்தபடியிருக்கிறேன்
மெல்லிசையை ஒத்தது
பெருஞ்சாறலாய் மனம் நனைக்க
விழிகள் உறக்கத்தைத் தொலைத்து
விட்டத்தில் தேவதை நடனங்களைத் தேடும்படி
மனம் முழுதையும் நிறைத்த நீ
என் வாழ்வினைக் காதலால் நிரப்ப
என்றருகில் வரப்போகிறாய்
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.