எனது நிழலாய் வருகிற உன் மேல்
நான் கொள்ளும் வெறுப்பையும்
அதையும் மீறிய உன் நேசமும்
இணையும் நேர்கோடுகளில்
உயிர்த்திருக்கிறது நம் நட்பு
...
வாளெடுத்து சொற்களாய் வீசும்போதெல்லாம்
லேசாய் சிரித்து அதிர வைக்கிறவன் நீ
...
நானோ வெறும்காற்றில் கைகளை வீசி
என்னையே வீழ்த்திக்கொள்கிறேன்
..
உன்னைப் புதைத்துவிட்டு உனதன்பை மட்டும்
பெறமுடியுமென குழி வெட்டி காத்திருக்கிறேன்
...
மஞ்சள் பூக்கள் உதிர்ந்த சாலையில்
கண்கள் பனிக்க விடைபெற்றாய்
..
இன்னும் அலைகிறேன் நல்லதொரு நட்பிற்க்காக
..
- சரவணன்.பெ (
கீற்றில் தேட...
நட்புக்காலம்
- விவரங்கள்
- சரவணன்.பெ
- பிரிவு: கவிதைகள்