கீற்றில் தேட...

பிரபஞ்ச வெளியில்
தொலைந்த
எனது நாட்களின்
பதிவுகளைத் தேடி..

முகங்களற்ற மனிதர்களின்
வெளியில்.....
தெறித்து சிதறிய
தூசிகளாய்
படிந்து கிடக்கின்றன
அடையாளமற்று
எனது நாட்கள்..!

பகலெல்லாம் கழிந்த
மௌன பொழுதுகளில்
என்னின் சிறைவாசம்..
தேவையின் .. சுமைகளோடு...!
மாலையின் நெருக்கத்தில்..
மௌனம் கலைய ..
எதிர்பார்ப்புகள்
எச்சரிக்கை ஆகுகின்றன..!

இரவின் தனிமையில்
தேடவேண்டும்
என்னை.. எனதாகிபோகும்
பொழுதுகளை..!

பொன்னியின் செல்வன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.