என் பிம்பம்
என்றுமில்லாத அளவில்
அதிக புன்னகையேந்தியிருக்கிறது
கண்ணாடிக் குடுவையினின்று
எட்டிப்பார்க்கும் ஊதாநிறப் பூக்கள்
கடைசியிதழ் வரையிலும்
மலர்ந்திருக்கின்றன
சுவரில் படர்ந்த அழகுக் கொடியில்
தலையாட்டிக்கொண்டிருக்கிறது
கிளையொன்றின் பிரியம்
அலமாரியின் புல்லாங்குழலின்
வழிந்தபடியிருக்கிறது நேசப் பாடலொன்று
திரைச்சீலையின் மெல்லிய அசைவுகளோடு
நீயும் நிலவும் உட்பிரவேசிக்கும் இப்பொழுதில்
உனையெழுதிய காகிதங்களின் படபடப்பில்
உயிர் பெறுகிறதென் காலம்!
- கோகுலன் (
கீற்றில் தேட...
நானும் காதலும் - 4
- விவரங்கள்
- கோகுலன்
- பிரிவு: கவிதைகள்