உருவாகித் தவழ்ந்தோடி
பிரவகித்து அடைபட்ட நதி,
பின்னர் விடுபட்டு
வழியெங்கும் நனைத்துச் சென்று,
கரைந்து தொலைத்தது
அடையாளத்தை!

வேப்பமரத்தின் உள்ளடர்த்தியில்
தனித்தக் கிளையின்
விரிவொன்றில் தங்கும்
செம்போந்தின் குரலில்,
தாளாத ஏக்கம்!

சில்லென்று வீசியக் காற்றில்,
சிலிர்த்துக் கொண்டு
தலையாட்டியக் கிளையிலிருந்து
உதிர்ந்த இலையொன்று,
அவள் முகத்தைப் போலவே இருந்தது.

இப்போதெல்லாம்...
எப்போதாவது தான் வருகிறது,
அவள் ஞாபகம்!

எஸ். அர்ஷியா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It