கீற்றில் தேட...

மறந்துபோன
வீணையின்
புதிய சிணுங்கல்களாய்
இசைக்கிறது
என் ஆன்மா
பழகிவிட்ட நட்பில்
புதிய திருப்பமாய்
வந்து
வந்துபோகிறது
உன்வார்த்தைகள்.
என் நரம்புகளில்
இசைமீட்ட
தேவையில்லை
இனி எனக்கொரு
மாலைப் பொழுது.