கீற்றில் தேட...

ஏழெட்டு திங்களுக்கு
பிந்தைய நிகழ்வுதான் என்றாலும்,
எழுதி வைத்திருந்தேன்
இருபாலினத்திலும்
உனக்கான பெயர்களை

உன்வரவு
உறுதியானதிலிருந்து
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை
என் மகிழ்ச்சியை விட.

உன் மென்மையை உணர
உன் அசைவுகளை ரசிக்க
உன் மொழியில் லயிக்க
காத்திருந்தேன் கனவுகளோடு.

பத்தாம் மாதம்
என் வானமாகமல்
பத்துவார
வானவில் ஆனதேன்?
வந்துக் கொண்டே இருக்கும் - உன்
வரவுக்கான
வாழ்த்துகளை என்ன செய்ய?

இப்பொழுதும்,
பிரபஞ்சம் பெரிதாய் இல்லை.
என் வலியை விட.

கொட்டிக்கிடக்கிறது
குங்குமப்பூ

சிரமப்பட்டுத்தான்
சிரிக்கிறேன் மற்றவர்முன்

சி.கருணாகரசு (karunasingai@gmail.com)