கீற்றில் தேட...

அளவற்ற நம்பிக்கைச் சருகுகள்

மனம் போர்த்தி

மௌனம் உலர்த்துகின்றன

 

ilango_Silence_00துண்டிக்கப்படும் கனவுகளின்

சாளரத்திலிருந்து

காற்றென கசிகிறது

பாதி வாசித்து கைவிடப்பட்ட

துரோகத்தின் இசை

 

பரிந்துரைக்கப்படும்

பாதைகளின் நான்குவழித்

திசைக் குழப்பத்தில்

 

பாதங்கள்பயணிக்கின்றன

யாரும் அறிந்திராத

ஒற்றையடிப் பாதையில்

 

உதிரும் பழுப்பு இலைகளின்

நரம்புகள் தொய்ந்து சுருங்கித் தோற்றமளிப்பதில்

கண்டடையாமலே

அதனின்று நழுவுகிறது

எழுதப் பயன்படாத கவிதைக்கான

சொற்கள்

 

அளவற்ற நம்பிக்கைச் சருகுகள்

மௌனம் போர்த்தி

மனம் உலர்த்துகின்றன

 

****

-இளங்கோ