தகாத வார்த்தையேனும்
தாய் மொழியில்எதிர்ப்பட்டு உரைப்போனை
எதிர்ப்பார்த்து உலவுகையில்
நிசப்தத்தின் பெரும் ஒலி
நிரப்பியிருந்ததில்
அதிர்ச்சி ஏதுமில்லை......
வெம்மையின் கிரணங்கள்
வலியின் குவியலை
வேட்டையாடுகையில்
வெளிப்படுகிற வியர்வையும்
கானலென காய்வதிலே
கவனம் கொண்டிருந்தது......
வழியில் இடறுகிற கல்லில்
அனிச்சையாய் எழுகிற
அம்மா எனும் முனகல்
வீரியம் குறைந்தவனின்
புணர்ச்சியாய்
ஒலித்துக்கொண்டிருந்தது,
வெற்றிடத்தின் காற்றலைகளில்.....
- செ.பாலச்சந்தர் (