மாயா
தீர்ந்து போகாத
சுரக்கும் அன்பின்
சுனைக்கு
உன் பெயரை
சூட்டலாம் என்றிருந்தேன்
பார்க்கும் அத்தனைக்கும்
உன் பெயரே வைக்க வேண்டியிருக்கிறது
கால நடனம்
இயற்கையின் எந்தப் பக்கம்
திரும்பினாலும் நடனம்
அதன் அதன் லயத்தில்
ஆடுகிறது காலம்
சலனமற்ற மாய வெளியின்
மவுனத்தில் முகிழ்கிறது
குழந்தையின் பெரும் களிப்பு
- மாரி.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை