அடிப்படை விதி அறி
அடிப்படை வாதம் எரி

*
பிறரில் இருந்து உன்னைக் காண்
உன்னிலிருந்து உன்னை நோக்கு

*
அவனின்றி
அசைவது இருக்கட்டும்
நீ இன்றி
அசைவது உணரா

*
விழித்த நித்திரை ஆபத்து
விளக்கிருந்தும்
வழி விடாது முட்டுச் சந்து

*
முகத்திரைக்குள்
விழி இருந்தும் ஒளியில்லை
மனத்திரைகள் அகலாவிடின்
ஒளி இருந்தும் வழி இல்லை

- கவிஜி