கீற்றில் தேட...

 

நமக்கிடையே ஏற்பட்ட
ஊடலில்
முதல் தளத்திலேயே
சில பொருட்களை
வாங்கிவிட்டு திரும்புகிறோம்.
அருகில்
தானியங்கிபடி
நகர்ந்து கொண்டேயிருந்தது
முன்னொருமுறை
தானியங்கிபடியில் பயணிக்கையில்
பயத்தில் உன் கைகோர்த்துக் கொண்டது
நொடிநேரமேயாயினும்
நெஞ்சுக்குள் நிறைந்து கிடந்தது
அந்த நினைவுகளை
செரித்தபடி
இருவரும் நகர
ஊடல் வடிந்து கொண்டிருந்தது
வீட்டிற்கு திரும்பும் வழியெங்கும்...
- இவள் பாரதி (devathaibharathi@gmail.com)
couple_260மக்கிடையே ஏற்பட்ட
ஊடலில்
முதல் தளத்திலேயே
சில பொருட்களை
வாங்கிவிட்டு திரும்புகிறோம்.

அருகில்
தானியங்கிபடி
நகர்ந்து கொண்டேயிருந்தது

முன்னொருமுறை
தானியங்கிபடியில் பயணிக்கையில்
பயத்தில் உன் கைகோர்த்துக் கொண்டது
நொடிநேரமேயாயினும்
நெஞ்சுக்குள் நிறைந்து கிடந்தது

அந்த நினைவுகளை
செரித்தபடி
இருவரும் நகர
ஊடல் வடிந்து கொண்டிருந்தது
வீட்டிற்குத் திரும்பும் வழியெங்கும்...

- இவள் பாரதி (devathaibharathi@gmail.com)