நசநசத்துப் பிசுப்பிசுத்து
சுனைமுள்ளேறிய உடல் கடந்து
கள்ளிக்காட்டில்
வேட்டைக்கு காத்திருக்கும்
ஓணான்களுக்குப் போக்கு காட்டி
தப்பிப் பிழைத்து
வானம் பார்த்த பூமியில்
வலசை தேடி அலைகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்
மனிதமற்ற கங்குகளை
உமிழ்ந்தது போதும்
பீரங்கிகளே
கொஞ்சம்
ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!

- வெறுத்தா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.