சொற்களைக் கடந்தவன்
என் கவிதைகளை
ஒரு முறை
வாசிக்க நேர்ந்தது
வெள்ளைக் காகிதங்களில்
வார்த்தை சடலங்களாய்
குவிந்து கிடக்கின்றன என்றான்
வார்த்தைகளற்று நீ எவ்விதம்
கவிதை இயற்றுவாய் என்றேன்
வார்த்தைகளனைத்தும்
உன்னை கைவிட்டுப் போன நாளில்
உன் உள்ளங்கையில் வந்தமரும்
அந்த வண்ணத்துப்பூச்சியை
பார்த்துக் கொண்டிரு
அது போதும் என்றான்

- தங்கேஸ்

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.