காலை வழிபாட்டுக் கூட்டத்தில்
தேசிய கீதம் பாடிக் கொண்டிக்கும் போது
எவர் கனவிலிருந்து பறந்து வந்ததோ
என நான் வியக்க
மிதந்து வந்தது காற்றில்
தாழ்வான வேப்ப மரக்கிளையில்
இப்பொழுது நித்திய கல்யாணிப்பூ
கருஞ்சிவப்பில் புள்ளிகள் இட்ட இதயத்தின்
நிழலும் சேர்ந்து துடிக்கிறதோ
என நான் சந்தேகிக்க
இரு சிறகுகளை விரிக்கின்றது
கண்கள் பேரெழில் மயங்கிச் சாக
கட்டற்ற சுதந்திரத்தில்
அணையாத சுடரென
படபடத்துக் கொண்டிருந்ததை
மனதில் ஏந்தலாம் என
நான் எண்ணும் போதே
எனக்கும் முன்பே என் மனது.
எந்திர கதியில்
அருகில் சென்றேன்
வானத்திற்கு தாவி விட்டது
மீண்டுமொரு சந்திப்பிற்கு
ஒளியாண்டுகள் காத்திரு என்றபடி

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.