கீற்றில் தேட...

தன்னை மட்டுமே
நிரப்பிக் கொள்ளும்
குடமல்ல மானுடம்
மற்றவருக்கும்
மடை திறக்கும்
நதி அது

*
நிரம்புதலைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
காலியாதலின்
முழுமை தெரியாதவர்கள்

*
எலியைப் பிடித்து
தின்கையில்
கண்டு கொள்ளாத
என் இறை
அணிலைப் பிடித்து
தின்கையில் பதறுகிறது
ரெண்டும் இரை என
தின்ற பூனையோ
போயாவ் போயாவ்
எனக் கத்துகிறது

*
இரவுப் பயணத்திற்கு
றெக்கை இருக்கிறது
விடிய விடிய காற்றசைக்கும்
ஓட்டுநர்
பெயர் தெரியா பறவை

- கவிஜி