தடுமாறிச் சரிந்த
காலச்சக்கரம்
தன்னை செப்பனிட
என்னிடம் வேண்டியது
கண்களில் நீருடன் ஒரு நாள்.
கோரமான முட்களையும்
நாறும் சதைத்துண்டுகளையும்
அப்புறப்படுத்தி
சிக்குண்டு நகர மறுக்கும்
பல்ச்சகரங்களை
அக்கறையுடன் சுத்தம்செய்து
வழி அனுப்பி வைத்தேன்
தைரியம் கூறி.
கைகொடுத்துப்பிரிந்த
காலச்சக்கரத்தின்
தொண்டைக்குழியில்
மெல்ல இறங்குகிறது
நீலம் பரவிய
ஆலகால விஷம்.
என் உள்ளங்கை
ரேகைப்பதிவுகளில்
இன்றளவும் ஊறுகிறது
ஐந்து தலை நாகமும்
கொஞ்சம் கடலும்
போரில் இழந்த உறவுகளும்.
- பிரேம பிரபா (