கீற்றில் தேட...

அற்ப நம்பிக்கையுடைய
ஆவணப்பொய்களை
பிரமாணப் பத்திரமென
துளிர்க்கக் கொடுத்ததை
சந்தேகிக்கவில்லை
ஒருபொழுதும்
மேவிய அன்பால்.

யாவுமற்ற
பின் நேரத்தில்
அனிச்சையாக
உரசிக் கொண்டே
இருந்ததில்
சேதாரமாகிக் கிடக்கிறது
அந்நாளையக் காதல்
இந்நாளின்
விடிந்த பொழுதில்
சேகரமாக்க முடியாமல்
சிதைந்து.

- ரவி அல்லது