முன்னாடி ஒரு முறை
முட்டிக்கொண்ட அனுபவம்
அப்படியே ஒரு முறை
முட்டி விடுவேன் என
தத்தளித்த அனுபவம்
அனுபவம் புதுமை
அதனிடம் கண்டேன்
இருக்கும் ஆனா இருக்காது
முதலில் தொடட்டும் கை ஆடி
பிறகு திறக்கட்டும்
கதவுக் கண்ணாடி

*
செம்பட்டைத் தலை
செங்காந்தள் நிறம்
சப்பை வாய்
சீனி சிரிப்பு
இடுங்கிய கண்களில்
பாதி சீனம்
அமுந்த மூக்கில்
மீதி திபெத்
பேச்சு மட்டும்
திருநெல்வேலிக்கும்
தேனிக்கும்
இடைல

*
மரம் மரமாய் குவிந்தேன்
வழி நெடுக இசைந்தேன்
பச்சையம் பூசி விரிந்தேன்
பறவைகளிடம் நிறைந்தேன்
நதியோடு நடந்தேன்
பாறை நடுவே அமர்ந்தேன்
தொன்ம நிழலாய் நகர்ந்தேன்
ஒற்றையடிகள் கடந்தேன்
ஒரு கொத்துச் செடியாய் உணர்ந்தேன்
ஒரு புத்து மடியாய்க் கிடந்தேன்
காடடைந்த ஒருவனில்
கூடடைகிறது காடும்

- கவிஜி

Pin It