மாணிக்கமோ
நஞ்சோ
வார்த்தைகளை
வெளியே உமிழாமல்
அதரம் தாண்டாது
தொண்டையிலே
அழுத்திப்
பிடித்திருத்திருக்கும்
மௌன அரவத்தின்
வீச்செல்லை முடிவிலி

வார்த்தைப் பிரசவத்தை
தள்ளிப் போடும்
மௌனங்கள் என்றும்
வலிமிகும் இடங்கள்

மனக்குகையெங்கும்
எதிரொலிக்கும்
மௌனசப்தத்தின்
டெசிபலளவு
மீயொலி

அழுத்த மௌனங்கள்
சுற்றியுள்ளோரை
மௌனமாக
இருக்க விடுவதில்லை

உறங்கும் எரிமலை
அலைமோதும் பாறை
ஆழ்கடலமைதி
சிறகடிக்கும் புள்ளினங்கால்
ஆர்ப்பரிக்கும் அரிமா
தன்னிரக்க கேவலென
எதுவும் இருக்கலாம்
மௌனத்தின் மறுபக்கத்தில்

மௌனத்தின் மறுபக்கம்
மௌனமாக என்றுமே
இருந்ததில்லை

- பா.சிவகுமார்

Pin It