உன்னைத் தொட்டுச் செல்லும் தென்றல்
என்னிடம் வரும் போது அனல் வீசுகிறது
உன்னிடம் மணம் வீசும் மலர்
என் கையில் ஏன் தீயாய் சுடுகிறது
உன் வார்த்தைகளில் இருக்கும் குளிர்
ஏன் என்னிடம் வருகையில் தணல் ஆகிறது
உன்னைப் பார்த்தால் மலரும் உள்ளம்
ஏன் நீயில்லாதபோது நெருப்பாகிறது
நீ என்ன பனியா குளிர் நிலவா
நானென்ன நெருப்பா தகிக்கும் சூரியனா

காதல் என்பது வெறும் காமமோ
காதல் குளிர வேண்டாமோ
கிளுகிளுக்க வேண்டாமோ
ஆனால், எல்லாக் காதலிலும்
காமம்தான் அடிநாதம் எனில்
எப்படி நான் காமம் தவிர்த்து
காதலிப்பது உன் போன்ற அழகியை

இல்லை நீயும் என்னைப் போல்
கிட்ட நெருங்கிப் பார்த்தால்
ஒரு முரண்பட்ட அசிங்கக் குப்பையோ?

- தேவதத்தன்

Pin It