ஆற்றின் நடுவே குறுகி
நீண்டிருக்கும் நீர்ப்பாறையை
தொட்டு வருவது தான் போட்டி
தொடுவதற்கு முன்னமே
தொட்ட நினைப்போடு
திரும்புகிறவர்கள் அதிகம்
தொட்டு விட்டு
தொட்டோமா இல்லையா
குழம்புகிறவர்களும் இருக்கிறார்கள்
தொட்ட பிறகு திகைத்து
மூச்சிரைத்து
அங்கேயே நிற்பவர் சிலர்
தொட்டு விட்டு திரும்பி வந்து
தோற்றோரும் உண்டு
தொட்டும் தொடாமல்
தொட்டது போல
தொடத் தொட
தடதடக்கும் அதே போட்டியில்
நீர்ப்பாறையும் தொட்ட
ஒருவனைத் தான்
போட்டி முடிந்தும்
தேடிக் கொண்டிருக்கிறார்கள்
- கவிஜி
நீர்ப்பாறை
More articles by கவிஜி
- தினசரி இயல்பு (21 செப் 2026)
- ஒலியற்ற முகவரி (15 செப் 2026)
- கண்ணைப் பிசைந்து கொண்டு நிற்கும் பொய்கள் (07 செப் 2026)
- உன் வெவ்வவேகள் (28 ஆக 2026)
- இப்படிக்கு காதலன் (28 ஆக 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.