ஒரு கோப்பையின்
கண்ணாடிச் சுவருக்குள் உடையாமலிருக்கும்
ஆழ்மனச் சமுத்திர இரவை
கைப்பிடியிலிருந்து நழுவாமலும் குலுங்காமலும்
விழி சிந்தாமல்
பெருந்துயர் பொங்கி வழிந்திடாமல்
மிஞ்சிநிற்கும் வேளையில்
கணத்தில் கசியும்
உள்ளூறும் துக்கத்தின் நிசப்தத்தை
அணைத்துக்கொள்ளாமல்
ஒரு கடலோ
நதியோ
சிறு ஓடையோ
உன் உள்ளங்கையில் வடிந்திடாமல்
எஞ்சியிருத்தல் தவம்.
 
- திருமூ
Pin It