துளித் துளியான மழை
பறவையின் எச்சங்கள்
துவண்ட மனதோடும்
துள்ளலோடும் விழும் பாதச் சுவடுகள்
என அனைத்தையும் செரித்தும்
சாம்பலாக்கியும் கடக்கும்
இடைவெளியில்
பூத்துக் களிக்கும் நிலம்
பிரபஞ்சத்தின் சிறிய அறை
இந்த பூமி எனும் சிறிய அறையில்
பறந்து வந்து தங்கி
மீண்டும் பறந்து போகும்
தூரம்தான் இந்த வாழ்வு
சொற் குறிப்புகளை நிரப்பிவிட்டு
பறக்கிறது ஒவ்வொரு பறவையும்
சொற்கள் இறந்துவிடாமல்
பற்றிக் கொள்கிறது உடல்.

- ப.தனஞ்ஜெயன்

Pin It