கடைசி வரை
துரத்திக் கொண்டே இருக்கிறேன்
ஓரடிக்கு முன்னால்
ஓடிக் கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை!

***

நினைவுகள்!

மனவெளியெங்கும்
இறைந்து கிடக்கின்றன
நினைவுகள்!
ஆகச் சிறந்த நினைவுகளை
சேகரிக்க முயல்கிறேன்
அடியில் சிக்கிக் கிடக்கும்
அவற்றின் மேல்
அடுக்கடுக்காக
அழுக்கு நினைவுகள்!
அழுக்குப்பசை
கையில் ஒட்டிக் கொண்டு
நகர மறுக்கிறது
பிசுப்பிசுப்பின்
கேவல இரசிப்பில்
பரிதாபமாக
நசுங்கிக் கொண்டிருக்கின்றன
ஆகச் சிறந்த நினைவுகள்!

- பா.சிவகுமார்

Pin It