புறநகரின் முடிவில்
வண்ணமிழந்து இடிந்து
கம்பி துருப்பிடித்து
இத்துப்போய்
எழுந்து நிற்குமிந்த
ஏரி காத்த அய்யனார் சிலையில்
வெவ்வேறு வீதியின்
இருவேறு பறவைகள் முத்தமிடுகின்றன.
ஊர் வெயிலை இழுத்துப் போர்த்தி நகர்கின்றன
கார்கால மேகங்கள்.

- சதீஷ் குமரன்

Pin It