அப்படியொன்றும் சொல்லும்படியான
வாதங்களை முன் வைத்துவிடவில்லை
அவனின் மௌனம் நினைத்துப் பார்ப்பதற்கு
ஏற்றதாய் அமையவில்லை பொழுதுகள்
நங்கூரத்தின் கெட்டித்த முனை
மனதின் ஆழம் வரை நீண்டதேயொழிய
தொட்டுவிடமுடியாமல் தவிக்கிறது
அசைந்தபடியே விலகிவிடும்
நினைவுகளோடு
மறக்கும் பொருட்டு உப்பரித்து
தனித்த தீவில் ஒதுங்கிவிடவும் கூடும்
ஏற்றத்தாழ்வின் அலைகள்
நீல நிறம் தவிர்த்து
கருஞ்சாம்பல் போர்த்தித்
திவலைகளாய் சிதறிக்கொண்டே இருக்கிறது
ஓய்வில்லா யுகம் முழுதும்..!
- இளங்கோ (
கீற்றில் தேட...
ஆழம் தொட முடியா நங்கூரத்தின் கெட்டித்த முனை
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்