அலுவலகத்தில் சுவையென
நீ சொல்லிப் போன உன் பெயர்
யாரையோ அவசரமாக
அழைக்கவென உச்சரித்து
பின் நாக்கடித்து
வெட்கத்தையும் மிக அதிகமாய்
அசட்டுத்தனத்தையுமென்
கண்களும் கன்னங்களும்
காட்டிக் கொடுக்கும்படியான
கலவரப்பொழுதொன்றினை
உருவாக்கும்
உன் பெயருக்கும் என் பெயருக்கும்
ஒரே அர்த்தமென நான்
எண்ணித் திளைத்திருக்கையில்
வா என்கிறாய் பின்
பயமாயிருக்கிறது
போ என்கிறாய்
தயங்கும் வார்த்தைகள் நிறைத்த
உன்னகராதியிலெனக்கும்
காதலுக்கும் குறித்திருக்கும்
பொருள்தான் என்ன பெண்ணே
- எம்.ரிஷான் ஷெரீப் (