சாலையில் கிடத்தி சுடுகாட்டிற்கு உரிமை
கேட்கும் எங்களையும்
பிணங்களாய் எண்ணி
பூட்ஸ் கால்களில் மிதிக்கும் இவர்களையும்
வேடிக்கைப் பார்த்தபடி நகரும்
சமூக
நடைபிணங்களின் மீதும்
நெருப்பை கக்கியபடி
சீறிப் பாய்கிறது
அவர்களுக்கான ராக்கெட்
வெற்றிகரமாக..

- சதீஷ் குமரன்

Pin It