அன்புள்ள அப்பாவிற்கு,

அங்கே நீங்கள் நலமா?
ஆனால் இங்கே நான்
அப்படி ஒன்றும் நலமாய் இல்லை...!

இவ்வுலகம் நன்மைகளை விட
ஈவதென்னவோ தீமைகள் தானப்பா...
அங்கே உங்களுக்கு எப்படி?

உறவுகள் என்ற பெயரில்
ஊசிகள்தான் இங்கே
அதிகமப்பா...
அங்கே ஊசிகள் உண்டா?

எழுச்சி மிக்க உணர்வூட்டி
ஏணியாய் இருந்த நீங்கள்
காட்டிய வழியில்தான்
நடக்கிறேன் அப்பா...
அங்கேயும் நீங்கள் அவ்வாறு தானா?

ஐயப்பாடுள்ள மனிதர் மத்தியில்
ஐம்புலன்களைக் கட்டித்தான் வைத்திருக்கிறேன்..
ஆனால் அடிமைப் படவில்லை அப்பா...
நீங்கள் சொன்னதுபோல்...

ஒன்று மட்டும் சொல்லுங்கள்
ஓர்மை தந்த நீங்கள்
அவ்வுலகில்
அமைதி தானா...?
இவ்வுலகை நினைவிருக்கிறதா..?

இப்படிக்கு,
பவானி ரெகு

Pin It