பசித்த யானையின்
இருள் வனத்தோடு
குறுக்கு நெடுக்கு சாலை
நம் மஞ்சள் வெளி

நகரம் பூத்த அந்தி நேர
மோகத்திலும்
நீ என்பேன்
அடி வானக் கூட்டில்
அசைந்தாடும் மேகத்திலும்
நீ என்பேன்

மின் விளக்கு எதிரியாகும்
முன் பின் வாகனம்
பெருங்கவலை

இருள் தேசக் காட்டில்
நீ கன்னல்
நான் மின்னல்

தாவி அணைக்க
நாமே வளைவு
மேனி தவிக்க
நாமே ஒலிப்பான்

இரட்டைச் சொல்லில்
முத்தமிட்டோம்
நான்கு கண்ணிலும்
இரு வழிச் சாலை

சாலை நடுவே
நாம் மறைந்தோம்
சோளக்காட்டில்
சொர்க்கம் வரைந்தோம்

இனி சர்க்கரை
பூத்துக் கிடக்கும்
சோளக்காடு

விடிந்த பிறகும்
வெட்கம் பூக்கும்
கூகுளும் சொல்லாக் காடு.....!

- கவிஜி

Pin It