வீடுகள் வரைந்து
வண்ணம் தீட்டுகிறாள்
யாழினிக்குட்டி.
அவள் ஆசைக்கேற்றவாறு
வளைந்து குழைந்து வாலாட்டி
விரலிடுக்கில் கிரேயானாகி
வானவில்லோடு டூக்காவிட்டு
மகளின் கைகளில்
நிறங்களிலான பிரியத்தை
நீட்டி தீட்டி
ஒரு குடம் தண்ணீர் ஊற்றி
ஒரு பூ பூத்துச்சான் விளையாட்டில்
தன்னைக் கரைத்து
லயித்துக் கிடக்கிறது
பெண் குழந்தைகள் தினத்தில்
பரிசு கிடைத்த பரவசத்தில்
பாவாடை புழுதியேறியதை
மறந்த இம்மாலை...

- சதீஷ் குமரன்

Pin It