மூன்று முறை நிராகரிக்கவிட்டு
முப்பது காசுக்கு காட்டிக் கொடுக்க விட்டு
தன் மரணத்தை
வரலாறாக்கிக் கொண்டார் Mr.X

*

வயல் வரப்போடு தனித்திருக்கிறேன்
வாய்க்காலோடு கசிகிறது
"வள்ளி வள்ளி என வந்தால்" பாடல்

*

சாமி பிடித்த மரங்களைப் போலவே
பேய் பிடித்த மரங்களையும்
ஒருவனும் வெட்டுவதில்லை

*

பூதக்கண்ணாடி வழியே
தெரிகிறது
தூரத்து சாமி சிலையும்

*

மூதாட்டி தலையில்
கூடை நிறைய மூப்பும்
கொஞ்சூண்டு கீரையும்

- கவிஜி

Pin It