*.நெடுந்தொலைவு
பைக் பயணத்தில்
பின்னமர்த்தி
அவள் பாடக் கேட்டு 
ரசித்திருப்பது!

*.விடியலில்
வெளியேறி
அந்தி சாய்கையில்
வந்திணைந்து
பேசித் தீரா
பெருங்கதை நிறைந்தது!

*.பள்ளிக்கு
வந்து காண்கிற
ஒருசிறுப்பொழுதில்
கண்களால் பரிமாறிடும்
வரிகளற்ற சம்பாஷணை
தருணமுடையது!

*.மகளோடிருப்பதென்பது
தாயுக்கும்
மகளுக்குமான
ரகசிய கணங்களை
ரசித்துக் கடப்பது!

*.மனம் சோர்ந்த 
வேளையில்
மடி தந்து
தலைகோதிடும்
எழுதவியலா
உணர்வால் ததும்பியது!

*.மாட்டிக் கொண்ட
பொழுதுகளில்
காட்டிக் கொடுக்கா
கண்ணியம் 
நிரம்பியது

- இசைமலர்

Pin It