நம்பிக்கையின் உந்துதலில்
கைக்கொண்ட சாவியை
இதுகாறும் என்னை
பிணைத்து வைத்த
பூட்டின் வாய் நுழைத்து
தாழ் திருப்ப
திறந்து கொண்டன
புதியதோர் உலகின்
கதவுகள்...
நெடுநாள் காத்திருப்பின்
விளிம்பில் பெற்ற
சுதந்திரத்தின் சுவாசம்
மனம் நிறைத்து
முன்னேற
என்னுள் எங்கேயோ
மற்றுமொரு
கதவு மூடிக்கொண்டது...

- அருணா சுப்ரமணியன்

Pin It