எதைப் பற்றியும் 
கவலைப்படாதீர் 
கண்டுகொள்ளாதீர் 
கண்ணீர் விடாதீர் துடிக்காதீர் 
துயரப்படாதீர் 
எழுதாதீர் பேசாதீர் கூடாதீர் 
புலன்களைப் பொத்தியபடி 
மனதை ஒருமுகப் படுத்துவீர் 
மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வர் ..
நோய்களே..நோயாளிகளே 
மனதை ஒருமுகப்படுத்துங்கள் 
புலன்களைப் பொத்துங்கள் 
ஒரே நாடு ஒரே மொழி ஒரே சுடுகாடு
ஓம் ஸ்வாகா...
 
- சதீஷ் குமரன்
Pin It