காடுமலை தேகம் எனது
சுற்றித் திரியும்
தட்டானுக்கு யோகம் அது

களிறு நிறையும் காட்டுக்குள்
என் மனமும் நிறையும்
புது கூட்டுக்குள்

தேயிலை நுனி சப்தம் கண்களில்
எதிர் நின்ற போது
குறுக்கு வெட்டில் காது திறந்த
சவுக்கை மரம்

கொய்யா மரமெல்லாம்
கொழுத்து தொங்கும்
மயக்கம் என்ன
பெரு வெளிச்சம் தான்

நையப்புடைத்த பின்னும்
கூழாங்கல் ஆற்றுக்கு
பெயர் மாறவில்லை

வெறிச்சோடிய புற்களின் கண்களில்
நுட்பத்திலும் நுட்பமான
என் துளி உலகம்

நானறிந்த பேச்சுக்களின் வழியே
நின் தாபங்களின் பேரிரைச்சலை
புது பறவை ஒன்று கத்திப் போகிறது

பின் பேரமைதியாய்
மலை உருட்டிப் போகும் பேருந்துள்
கண் விழிக்கிறேன்
கனவென்று எப்படி நம்ப...!

- கவிஜி

Pin It