முட்டையிட்டு
குஞ்சு பொறித்து
உல்லாசமாக
ஊர் திரும்புகின்றன,
ஆஸ்திரெலிய பறவைகள்.
நம்ம ஊர் காகங்கள்
கண்டுகொள்வதே இல்லை.
எல்லைகளை அறியாத
பறவைகளிடம்
கற்றுக் கொள்ள வேண்டும்,
எல்லை மீறாமல் இருப்பதற்கு.
- பா.சதீஸ் முத்து கோபால்
கீற்றில் தேட...
நிறம் அறியாத பறவைகள்
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: கவிதைகள்