வயதான அரசியல் நமது
வராமலே வந்து விடும்
நதி

மணல் மூட்டை ஞாபகங்கள்
கரும் பணக்காட்டில்
காய்ச்சிய சரக்கு

அரை குறையா மேம்பாலம்
ஆனாலும் அட்டகாச
கட் அவுட்டு

தொழிற் கூடங்கள் கல்லூரி பள்ளிகள்
சொக்கத் தங்கங்கள்
சினிமா தாரகைகள்

இலக்கிய நாற்றங்கள்
இங்கிலீசில் விளாசலாம்
பிச்சையெடுக்க வரிசையில் நிற்கலாம்

கொன்று போட வன்கலவி சிறந்தது
கொள்முதல் எதற்கு
டெங்கு காய்ச்சல் நமக்கு

புழு வைக்கும் அரிசி கூடம்
புரிந்தது மாட்டுக்
கறி பாடம்

புலன் விசாரணை இன்னும் துலங்கும்
காதல் கல்யாணம்
வெட்டு தட்டு முடிந்தால் தாலி கட்டு

பாரம்பரியம் ஒன்றுமில்லை
பார்த்த பொழுது
கை நாட்டு

பசி வந்தது வயிறும் இல்லை
பாசம் நொந்தது
பயிரும் இல்லை

தூக்கிட்டு சாவது கலை
வளர்ப்போம் கிராமமெல்லாம்
மரம்

ஆடல் பாடல் கூத்து
அழுதாத்தான் குழந்தைங்கள்
கெத்து

ஆடும் கூத்து ஆர் கே நகர்
அடிமாட்டு சந்தை
அம்மா பிள்ளைகள்

எல்லா பக்கமும் தோண்டி
போடுவோம் தமிழ் நாட்டில்
பூ மலர தூண்டிலும் போடுவோம்

புத்தன் நாளோ யுத்த நாளோ
நடிகை நடிகன் பேசணும்
வருஷம் 340 நாளும்
மனுஷன் நாசமா போகணும்

முடிக்கிறேன் சரியை
முந்துகின்றன தவறுகள்...

- கவிஜி

Pin It