அவ்வப்போது குளியலறையில்
உடலைத் தேய்த்துக் குளிக்கிற போது
சில அழுகைக் காட்சிகளுடன்
'ஏதாவது கத்தின சூடுவச்சிருவன்"
அம்மாவின் மிரட்டலின் முகம்
சூட்டுத் தழும்பில் படர்ந்து
பயத்தைக் காட்டியவாறு அந்த நாளை
இன்றும் நினைவூட்டுகிறது.
- இல.பிரகாசம்
கீற்றில் தேட...
நினைவூட்டல்!
- விவரங்கள்
- இல.பிரகாசம்
- பிரிவு: கவிதைகள்